வெள்ளி, டிசம்பர் 09, 2011

புதிய பழக்கம்----------1 மற்றவர்கள் பார்வையில் நாம் செயல்படும் போது



சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம்.நம் பெற்றோர்,உறவினர்,நண்பர்கள் மட்டுமின்றி  நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மை கவனித்து கொண்டு வருகிறார்கள் என்ற உணர்வு அனைவர்க்கும் சர்வ சாதரணமாக ஏற்படுகிறது.அந்த நிலையில் மற்றவர்கள்  நம்மை பற்றி என்ன நினைகிறார்கள் என்ற எண்ணம் மனதில் தோன்றலாம் 

               "நீ எப்போதும் நேரத்திற்கு வருவதில்லை"
               "நீ ஒரு ஓவியன்"
               "நீ மிகவும் அதிகமாக சாபிடுகிறாய்"
                "நீ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாய் என்பதை நம்ப முடியவில்லை"

          இப்படி நம்மை பற்றி மற்றவர்கள் சாடுவதை நாம் கேட்டு இருப்போம்.இப்படி பட்ட கருத்துகள் ஒருவருடைய குணத்தின் குறை பாடுகளை உணர்த்துவது ஆகும் இந்த மாறி குறை பாடுகள் ஏற்படாத படி நடந்து கொள்ள நம்மால் முடியும்.அது தான் எதையும் சீரிய முறையில் சிந்தித்து முடிவெடுப்பது.மனதில் ஒரு சுறுசுறுப்பு ஓடி கொண்டு இருக்கும் போது அதனால் பல நல்ல விளைவுகள் ஏற்பட கூடும்.நமது செயலில் அபார திறமை வெளி படும்.
பழைய பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக புது முயற்சியில் இறங்க முடியும்.

          அப்படி முயலும் போது எந்த ஒரு பிரச்சனையும் ஆக்க பூர்வமாக சிந்திக்க முடியும்.நாம் மும்பை நகரத்துக்கு போகிறோம்.அங்கே போக வேண்டிய இடங்களை கண்டறிய ஒரு வரைபடத்தை எடுத்து போகிறோம்.ஆனால் அது மும்பை வரைபடம் அல்ல பெங்களூர் வரைபடம்.அதை வைத்து கொண்டு மும்பையில் நாம் போக வேண்டிய இடத்துக்கு போக முடியுமா?முடியாது. ஆகையால் மும்பை வரைபடத்தை வாங்கி அதன் படி செயல் பட வேண்டும்.வாழ்க்கை அப்படி தான்.

          சுற்றுபுறத்திற்கு  ஏற்ப சிந்திக்க வேண்டும்.எந்த விசயத்தையும் இரண்டு கண்ணோட்டங்களோடு பார்க்க வேண்டும். முதலாவது ஒரு விசயத்தை நம்மால் செய்ய முடியாது என்று நினைப்பது.பயம்,தயக்கம்,அனுபவம் இல்லாதது தான் காரணமாக இருக்கலாம்.இரண்டாவது அதே விசயத்தை துணித்து செயலாற்ற முடியும் என்று நினைப்பது.இந்த இரண்டு வகை எண்ணங்களையும் கொஞ்சம் பார்க்கலாம்.ஒரு வேலையை செய்ய தயங்குபவர்கள் பொறுப்பை ஏற்க மாட்டார்கள் எதிலும் உறுதியுடன் செயல் பட மாட்டார்கள்.

          என் அறிவு திறமை அவ்வளவு தான்.என்னால் அவ்வளவு தான் செய்ய முடியும் என்ற எண்ணம் இவர்கள் மனதில் மேலோங்கி நிற்கும்.என்னால் மேலும் எதுவும் செய்ய முடியாது என்று முடிவு கட்டுவார்கள்.எனக்கு நேரம் போதவில்லை.இதற்க்கு மேல் செய்ய முடியவில்லை.ஏதோ ஒரு சக்தி எனக்கு அப்பாற்பட்ட சக்தி என்னை தடுத்து விட்டது என்று கூறுவது மற்றொரு வாதம். என் மனைவி கொஞ்சம் பொறுமையை கடை பிடித்து இருக்க வேண்டும்.அப்போது நான் எடுத்த காரியத்தை முடித்து இருப்பேன் என்று மற்றவர் மேல் பழி போடுவது ஒரு எண்ணம்.

          நான் இப்படி செய்ய வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் மற்றவர்கள் வேறு விதமாய்  செய்ய தூண்டி என்னை தடுமாற செய்து  விட்டார்கள் என்ற விதாண்ட வாதம்.நம்மால் முடியுமா?என்ற கேள்வியுடன் செயலில் இறங்கும் போது பாதி தோல்வி நம்மை பாதிக்கும்.நம்மால் முடியும் என்று செயல் படும் போது பாதி வெற்றி கிடைத்தது போல் தோன்றும்.முதலில் விவாதித்தது நெகடிவ் அணுகுமுறை.இரண்டாவது அணுகுமுறை பாசிடிவ்  தன்மை உடையது.ஒரு விசயத்தை இந்த இரண்டு அணுகுமுறையில் சோதித்து பார்க்கும் போது எப்படி இருக்கும்?

   எதிர்ப்பு மனப்பான்மை.                        
  (நெகடிவ் அணுகுமுறை)   
1.இதற்க்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது
 2.நான் எப்போதும் அப்படி தான்.                                            
3. அவன் என்னை பைத்தியகாரனாக்கி விட்டான்.              
4. அதை செய்ய என்னை அனுமதிக்க மாட்டார்கள்.          
5.நான் அதை செய்தே ஆக வேண்டும்.                              
6. வேறு வழியில்லை.                                                                  
7. நான் செய்தாக வேண்டும்

       முடியும் என்ற மனப்பான்மை

               (பாசிட்வ் அணுகுமுறை )
1.பிரச்சனையை சமாளிக்க வேறு வழிகளை சிந்திக்கலாம்
2.நான் வேறு வழியை கடை பிடிக்க முடியும் 
3. நான்  என் உணர்சிகளை கட்டு படுத்த முடியும் 
4. என்னால் அதை சரி செய்ய முடியும்  
5. நான் வேறு வழியை கடை பிடிக்க முடியும்.
6.  மாற்று வழியுண்டு.
7.நான் செய்ய விரும்புகிறேன் 
  
          ஒவ்வொரு  விசயத்திலும் இந்த இரண்டு வகை அணுகு முறைகளை ஒவ்வொருவரும் கடை பிடிக்க முடியும்.மனம் தான் இதற்க்கு காரணம்.பழக்கம் என்ற பெயரினால் செய்ய முடியாது என்பதை விட புது பழக்கத்தை ,பாசிடிவ் அணுகுமுறையால் நம்மை நாமே துடிபுள்ளவர்களாக,திறமை உள்ளவர்களாக மாற்றி கொள்ள முடியும்.  

2 கருத்துகள்: