வெள்ளி, டிசம்பர் 09, 2011

புதிய பழக்கம்----------1 சுந்ததிர எப்படி உணர்வு கிடைக்கும்?



HOW I GOT IT
  நான் வயது வந்த இளைஞன் என்னால் சுதந்திரமாக வாழ முடியும்.நினைத்ததை செய்ய முடியும் யாரும் நம்மை கட்டுபடுத்த முடியாது என்ற உணர்வு ஏற்பட வேண்டும்.ஒருவன் மாணவனாக இருந்த போது அரசியலில் பங்கேற்று அரசை எதிர்த்து போரிட வேண்டி  இருந்தது.அவனை கைது செய்து  சிறையில் அடைத்தார்கள்.பல மாதங்கள் சிறையில் அடைபட்டு இருக்க நேர்ந்தது.அவன் சிறையில் அடைபட்டதால் தன் சுந்திரம் பறி போய்விட்டதாக நினைத்து கொள்ளவில்லை.என்னை நான்கு சுவர்களுக்குள் அடைத்து விட்டார்கள் அதினால் என்ன?என் மனதை யாரும் கட்டு படுத்த முடியாது.நான் சிந்திக்க முடியும்.என்னால் எதிர்காலத்திற்கான திட்டத்தை வகுக்க முடியும்.என்று எண்ணினான் ,எதிர்கால திட்டங்களை எழுத தொடங்கினான்.சிறையில் இருந்து விடுவிக்க பட்டதும் அவன் எழுதிய புத்தகங்கள் அச்சாகி வேகமாக விற்க துவங்கியது.பெரிய அளவில் பெயரும், புகழும்,பணமும் கிடைத்தது.அந்த புத்தகத்தை படிபவர்கள் எப்படி ஒரு மனிதன் சுந்திரமாக வாழ முடியும் என்பதை உணர்ந்தார்கள்.சுதந்திர உணர்வு பெற்றவர்கள் தான் வாழ்கையில் நினைத்ததை சாதிக்க முடியும்.எதையும் அதிவேகமாக செய்து முடிக்க முடியும்.

         ஒருவன் பழக்க வழக்கங்களுக்கு  ஆளாகி விட்டால் அவன் உடலை சுற்றி அந்த பழக்கவழக்கங்கள் கயிற்றை போல சுற்றி கொண்டு விடும்.அவன் கை கால் கட்டபட்டவனை போல் குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே செயல் பட முடியும்.அவன் தன் பழக்க வழக்கங்களை மாற்றி கொள்ள வேண்டும்.தன்னை சுற்றி உள்ள கயிறை  அறுத்து கொண்டு வெளியே வர வேண்டும் இது முடியுமா?முடியும்.துடிப்புடன் செயல் பட பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட முழு மூச்சுடன் செயல் பட வேண்டும்.உதாரணமாக பூமியின்  ஈர்ப்பு சக்தியை பற்றி நமக்கு நன்றாக தெரியும்.ஒரு கல்லை தூக்கி போட்டால் மீண்டும் பூமிக்கே வந்து விடும்.இந்த ஈர்ப்பு சக்தியை மனிதன் சமீபகாலமாக வென்று  காட்டி இருக்கிறான் 

          விமானம் வானத்தில் பறக்கும் போது சக்தி வாய்ந்த இஞ்சின் அதனை பூமியில்  விழாமல் தாங்கி பிடித்து கொண்டு உயரே உயரே போக செய்கிறது நினைத்த இடத்தில விமானம் போய் இறங்க முடியும்.விமானம் என்பது பொதுவாக முப்பதாயிரம் அல்லது   நாற்பதாயிரம் அடி வரையில் மட்டுமே பறக்கும்.அந்த உயரத்தையும் கடந்து சந்திர மண்டலத்துக்கு போய் வந்தது எப்படி?வானவெளி கப்பலில் சந்திர மண்டலத்துக்கு  போய் வர முடிந்தது.ஆனால் அவன் பயணம் செய்த வான வெளி கப்பலை,பூமியின்  ஈர்ப்பு சக்தியை மிஞ்ச கூடிய வகையில் ஆற்றல் மிகுந்த ராக்கெட் அதிவேகமாக லட்சகணக்கான மைல்  வேகத்தில் இழுத்து சென்றது.  

          அதன் விளைவாக தான் இன்று வான வெளியில் ஆராய்ச்சி செய்ய போகிறவர்கள் ராக்கெட்டின் உதவியுடன் வானவெளி  கப்பலில் உயரமான இடத்தை அடைய முடிகிறது.பூமியின் அபார  ஈர்ப்பு சக்தியை வெல்ல முடிந்த மனிதன் பழக்கவழக்கங்களை    வெல்ல முடியாதா?முடியும்.முயன்றால் முடியாதது எது?

1 கருத்து:

  1. 1xbet korean bookmaker review - OnlineSportsBet.co.kr
    1xbet korean 1xbet bookmaker review. 1xbet korean bookmaker review. 1xbet korean bookmaker 샌즈카지노 review. 1xbet korean 제왕 카지노 bookmaker review.

    பதிலளிநீக்கு