வெள்ளி, டிசம்பர் 09, 2011

புதிய பழக்கம்----------1 துடிப்புடன் செயல் பட முதல் வழி

     வாழ்கையில் முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் எல்லாருக்கும் இருக்கிறது ஆனால் வாழ்கையில் வெற்றி பெற்றவர்களை, பெரும் பணத்தில் புரள்பவர்களை  பார்க்கும் போது அவர்களை போல்  நம்மால் செயல் பட முடியவில்லையே,சாதிக்க முடியவில்லையே  என்கிற ஏக்கம் வருகிறது .எல்லாரும் மனிதர்கள்  தாம்.ஒரே கல்லூரியில் படித்த இருவரில் ஒருவன் பெரிய பதவியை அடைகிறான் இன்னொருவன் சாதரணமாக  வேலை பார்த்து கொண்டு இருக்கிறான்.இருவரும் கற்ற கல்வி ஒன்று தான்.ஒன்றாக பட்டம் வாங்கியவர்கள் தான். 

         ஆனாலும் ஒருவன் மட்டும் வாழ்கையில் உயர முடிகிறது.எப்படி?எதையும் சாமாளிக்கும் திறமை அவனிடம் இருக்கிறது.கார் பங்களா என்று சொகுசாக வாழ முடிகிறது.ஆடம்பரமாக வாழ்கிறான் இந்த வெற்றியின் ரகசியம் என்ன?இரண்டாமவன் சிந்தித்து பார்கிறான் வாழ்கையில் உயர்ந்தவன் தனது திறமைகளை வெளிபடுத்துபவன். எதிலும் துணிந்து செயல் படுவன் என்று தெரிகிறது.எப்படி பட்ட சிக்கல்களுக்கும் தீர்வு காண்பவன் என்பதை உணர்கிறான்.ஆனால் அவனை போல் தன்னால் முடியவில்லையே ஏன்?இரண்டாமவன் சிந்தித்து பார்க்கும் போது விடை கிடைகிறது

         எந்த விசயத்திலும் இவன் மெத்தனமாக நடந்து கொள்பவன் பழக்க வழக்கங்கள் அப்படி.அவனது பெற்றோர் அவனை கண்டிப்பாக வளர்த்து விட்டார்கள்.புதிதாக எதையாவது செய்வது என்றால் பயம்.கல்லூரிக்கு போகும் போது கூட ஒரே பாதையில் சென்று வருபவன்.வேறு பாதையில் போக பயம்.மாறன்களை விரும்பாதவன்.எல்லா விசயத்திலும் பெற்றோர்களை போலவே வளர்ந்து கொள்ள வேண்டும் என்று வளர்க்க பட்டவன்.உள்ளுரிலே வேலைக்கு சேர வேண்டும் என நினைத்தான். வெளியூர் சென்றால் நிறைய பணம் கிடைக்கும், விரைவில் பதவி உயர்வு கிடைக்கும் என்றாலும் ஏற்று கொள்ள விரும்பவில்லை.


          பழக்கத்தின் பயன்.தலைவிதி என்று நினைத்து கொள்வான். அதனால் அவனால் வாழ்கையில் வேகமாக முன்னேற முடியவில்லை.பொதுவானக துடிப்புடன் செயல் படுவர்கள் திறமையுடன் செயல் படுவர்கள் தான் பெரிய அளவில் சாதனைகளை செய்ய முடியும்.இதற்காக  அவர்கள் முதலில் தமை சில கட்டுப்பாடுகளில் இருந்து விடுவித்து கொள்ள வேண்டும். மனதில் சுதந்திரம் பெற வேண்டும்.பழக்க வழக்திர்க்கோ,கட்டுபாடிற்கோ அடங்கி பெட்டி பாம்பாக இருக்க கூடாது 


          முதலில் தனக்கு சுந்ததிர உணர்வு ஏற்படும் படி மனபக்குவம் அடைய வேண்டும்.எப்படி சுந்ததிர உணர்வு கிடைக்கும்?அதை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக