வெள்ளி, டிசம்பர் 09, 2011

புதிய பழக்கம்----------1 உண்மையான காரணம் என்ன?



          எந்த விசயத்துக்கும் உண்மையான காரணம் என்று ஒன்று உண்டு.போலியான காரணம் என்று ஒன்று உண்டு.இதில் எதை கண்டுபிடிக்க  வேண்டும் என்பது தான் பிரச்னை.கல்லூரியில் படித்து கொண்டு இருக்கும் ஒரு மாணவன் தீடீர் என்று  ஆசிரியரிடம்  விடை கொடுங்கள் நான் கிரிக்கெட் விளையாட போக வேண்டும்  என்றான்.ஆசிரியர் அவனிடம்  நீ போயாக வேண்டுமா நீயாக போக விரும்புகிறாயா என்று கேட்டார்.

         நான் போயாக வேண்டும்
         போகாவிட்டால் என்ன ஆகும்?
         என்னை கிரிக்கெட் அணியில்  இருந்து நீக்கி விடுவார்கள் 
         அப்படி நீக்கி விட்டாள் உன் நிலை என்னவாகும்?
         என்னால் பொறுத்து கொள்ள முடியாது.

         அதவாது கிரிக்கெட் அணியில் இடம் பெற வேண்டும் என்பதற்காக போகிறாய் இங்கே வகுப்பை தவற விட்டால் என்ன ஆகும் என்று கேள்வி எழுப்பினார்.அந்த மாணவன் எனக்கு தெரியாது என்றான்.ஆசிரியர் அவனிடம் நன்றாக  யோசித்து பார் வகுப்பை தவறவிட்டால் உன் நிலை என்னவாகும் என்று கேட்டார் அந்த மாணவன் என்னை வெளியேற்றி விடுவீர்களா என கேட்டான் அது செயற்கை ஆன செயல் உண்மையில் என்னவாகும் என்று ஆசிரியர் கேட்டார். மற்ற மாணவர்களுடன் ஒப்பிடும் போது உன் நிலை என்னவாகும் கிரிக்கெட் பயில போகாவிட்டால் அணியில் இடம் பெற முடியாது.வகுப்பை தவற விட்டாள் உன் நிலை என்னவாகும் என்றார்.என் கல்வி தடை படும் என்றான்.இப்போது முடிவு செய்து கொள் கிரிக்கெட் பயில போக வேண்டுமா?  இல்லை படிக்கச் வேண்டுமா என்று என்றார்.அவன் நான் படிக்கிறேன் ஓய்வு நேரத்தில் மட்டும் விளையாட செல்கிறேன் என்றான்.

         ஒரு முடிவை எடுப்பது அவன் சுதந்திரம் ஆனால் அது எதிர்காலத்தை எந்த அளவு பாதிக்கும் என்பதை சிந்தித்து செயல் பட வேண்டும்.

1 கருத்து: