வெள்ளி, டிசம்பர் 09, 2011

புதிய பழக்கம்----------1 இயலாமைக்கு காரணம் காட்டுபவர்கள்



         எந்த ஒரு செயலுக்கு தயக்கம் காட்டுபவர்கள் பயபடுபவர்கள் மற்றவர்கள் மேல் பழியை போட்டு ஒதுங்கி கொள்வார்கள்.இவர்கள் செய்யும் காரியங்களுக்கு உறவினர்கள் நண்பர்கள் தடங்கலாக இருப்பாதாய் சொல்வார்கள் அதற்கான ஆதாரத்தையும் காட்ட தயாராய்  இருப்பார்கள்  மற்றவர்களால் அவர்கள் திட்டங்கள் பாழாகி விடுவதாயும்  வாழ்க்கை என்பது தன்னால் ஓடி கொண்டு இருப்பதாயும் அடிகடி சொல்வார்கள்.மற்றவர்களை.சுற்று புறத்தை,நட்சத்திர பலன்களை கூட காரணம் கட்ட தயங்க  மாட்டார்கள்  

          செய்ய இயவில்லை என்று ஆயிரம் காரணம் காட்டும் இவர்கள் செய்ய முடியும் என்பதற்கு ஒன்று இரண்டு காரணங்களை  கூட காட்ட மாட்டார்கள்.எப்படி பட்ட தடங்களையும் மனிதன் சமாளிக்க முடியும் என்பதை வலியுறுத்தி மேடையில் ஒரு குரு பேசி கொண்டு இருந்தார்.ஒருவன் அவரிடம் வந்து நீங்கள் பேசுவது கேட்க  நன்றாக இருக்கிறது .வாழ்கையில் சாத்தியம் படாது நிஜத்தில் நடக்காது என்றான்.ஏன் அப்படி சொல்கிறாய் என்றார் குரு. ஒவ்வொரு  சந்தர்பமும் சுற்று புறமும் வித்தியாசமானது.என் வாழ்கையை கேளுங்கள் என்று கூறினான்,

         நானும் என் மனைவியும் எப்போதும் போல் அன்புடன் இருக்க முடியவில்லை.அவள் என்னிடம் அன்பு செலுத்துவதில்லை அதினால் நானும் அன்பு செலுத்துவதில்லை.இதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும் என்றான் அதருக்கு குரு உங்களுக்குள் அன்பு செலுத்த வேண்டும் என்ற வளர்ச்சியே இல்லையா என்றார்.அவன் ஆரம்பத்தில் அதிக அன்புடன் பழகினோம் இப்போது இல்லை என்றான்.அப்படியானால் உன் மனைவியிடம் அதிக அன்பு காட்டு முன்னை விட அதிகமாக நேசி என்றார்.எங்களுக்கு தான் உணர்ச்சியே இல்லையே அப்புறம் எப்படி முடியும் என்றான்,

OHHHHHHHHHHOOOOOOOOO
        அதினால் தான் சொல்கிறேன் உணர்சிகளை கொட்டி அன்பு செலுத்த முயல வேண்டும்.மனைவியாக ஒரு சில தியாகம் செய் விட்டு கொடு அவளுக்கும் உன்னை நேசிக்க வேண்டும் என்ற எண்ணம் தானாக  வரும் என்றார்.காதல் என்பது வெறும் சொல் அல்ல செயலில் காட்ட கூடியது.ஏதாவது ஒரு காரணத்தை காட்டி மனைவியை வெறுத்து விட கூடாது அதே போல் தான் மனைவியும் கணவனை ஒரு காரணத்துக்காக ஒதுக்கி விட கூடாது 

        சினிமா படங்கள் பார்க்கும் போது மனிதன் உணர்சிகளுக்கு அடிமை ஆகிறான் என்பது போல் கதைகள் நம் மனதை தொடுகின்றன..உணர்சிகளுக்கு மனிதன் அடிமை ஆவது போன்று தான் பெருமான்மையான கதைகள் வெளி வருகிறது.நாம் செய்யும் தவறுகளுக்கு உணர்ச்சியை காரணம் காட்டுபவர்கள் பலர்.மற்றவர்களால் உணர்சிகளால் தோல்வி உண்டானது என்று தம்மையே சமாதனபடுத்தி கொள்வார்கள்.சாதித்து  காட்ட வேண்டும் என்ற என்ன உடையவர்கள் இப்படி பேசுவதில்லை.அன்பு காதல் எல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல செயலில் காட்ட பட வேண்டிய ஒன்று.

        செயலில் காட்டும் போது ஒரு சில தியாகங்கள்  செய்ய வேண்டி வரும் விட்டு கொடுக்க வேண்டு வரும். மற்றவர்களுக்காக தியாகம் செய்பவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் எப்படி விட்டு கொடுத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அன்பு செலுத்துபவர்கள்  அன்பு செலுத்தாதவர்கள்  நடக்கை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் .பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் என்ன தியாகம்  செய்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அன்பு செலுத்துவது என்பது மகத்தான விசயம் 

        அன்பு செலுத்துவதால் காதலிப்பதால்  உணர்சிகளை நமது கட்டுபாட்டிற்குள் கொண்டு வர முடியும்.உணர்சிகளை கட்டுபாட்டிற்குள் கொண்டு வருபவர்கள் அனைவரும் வாழ தெரிந்தவர்கள் வாழ்கையில் சாதனைகளை  புரிபவர்கள் வெற்றியில் திளைத்திருப்பவர்கள்.

                என்ன நண்பர்களே நீங்கள் சாதிக்க தயாரா அப்படி என்றால் இந்த முதல் பழக்கத்தை எல்லாம் கடை பிடியுங்கள்  அடுத்த படியாக நமக்கு தொடர்புள்ள விசயங்களை பற்றி புதிய பழக்கம் இரண்டாம் பகுதியில் பார்க்கலாம்  

2 கருத்துகள்: